“ரத்தக்கண்ணீர்” படத்திற்காக நடிகர் எம். ஆர். ராதா வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

ratthakaneer-
ratthakaneer-

60 70 காலகட்டங்களில் சினிமா உலகில் பெரிய அளவில் பேசப்பட்டவர்கள் எம்ஜிஆர், சிவாஜி இவர்கள் தொடர்ந்து சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்து ஓடினார்கள் இவர்களுக்கு இணையாக வில்லன் ரோலில் பின்னி பெடல் எடுத்தவர்கள் ஒரு சிலரே அதில் முக்கியமாக பேசப்படுபவர்கள் நம்பியார் மற்றும் எம் ஆர் ராதா.

எம் ஆர் ராதா சினிமா உலகில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் தனது முழு திறமையை வெளிப்படுத்தி நடிப்பார். அதனாலையே எம்ஜிஆர் சிவாஜி போன்றவர்களுக்கு இணையாக எம் ஆர் ராதாவின் பெயர் பேசப்பட்டது. சினிமா உலகில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று பெரிய அளவில் பேசப்பட்டார்.

அதேபோல  நிஜத்திலும் சூப்பராக வாழ்ந்தார் இவருக்கு 12 குழந்தைகள் என (wiki) சொல்லப்படுகிறது அதில் பலர் சினிமாவில் இப்பொழுதும் நடிக்கின்றனர். குறிப்பாக ராதாரவி, ராதிகா, எம் ஆர் ஆர் வாசு  மற்றும் பலர் சினிமாவில் நடித்தனர். எம் ஆர் ராதா சினிமா உலகில் பல படங்களில் நடித்தாலும் அவருக்கு பேவரட் திரைப்படமாக அமைந்தது ரத்தக்கண்ணீர் தான்.

இந்த படம் 1954 ஆம் ஆண்டு வெளியாகியது இந்த படத்தில் எம் ஆர் ராதா தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி இருப்பார் இந்த படம் இப்பொழுதும் பலருக்கும் பிடித்து போன படமாக இருக்கிறது. இந்த படத்தில் எம் ஆர் ராதா உடன் கைகோர்த்து சந்திரபாபு, ராஜேந்திரன், ராஜம், ஸ்ரீ ரஞ்சினி மற்றும் பலர் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது இந்த படத்தில் நடித்ததற்காக எம் ஆர் ராதா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அவ்வையார் படத்திற்காக கே பி சுந்தராம்பாளுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தனக்கு கே பி சுந்தராம்பாளை விட 25,000 அதிகம் சம்பளம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தயாரிப்பு நிறுவனமும் தருவதாக ஒப்புக்கொண்ட பின் படம் விறுவிறுப்பாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.