496 படங்களில் நடித்தும் காசு இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்த முந்தானை முடிச்சி பட நடிகர் தவக்களை.! அப்படி என்ன பண்ணுனாரு..

தமிழ் சினிமாவில் 400 திரைப் படங்களுக்கு மேல் நடித்த நடிகர் நடிகைகளைப் பற்றி நாம் பெரிதும் பேசுகிறோம். ஆனால் மூன்று அடி உயரம் சின்ன முகம் கொண்ட ஒருவரை இதுவரை 496 படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவரைப் பற்றியே நாம் தற்பொழுது பேசாவிட்டாலும் இவரை பல பிரபலங்கள் அப்போதே தலையில் தூக்கி வைத்து கொண்டாடி உள்ளனர் அதிலும் குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்த நடிகராக இருந்தவர் தான் நடிகர் தவக்களை என்கின்ற சிட்டிபாபு.

பொய்சாட்சி என்ற திரைப்படத்தில் அவரது தந்தை நடித்துக் கொண்டிருக்கும்போது சூட்டிங்கை பார்க்க இவரும் கூடிய சென்றிருந்தார் . அங்கே இருந்த ஒருவர் பாக்யராஜிடம் இவரை அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார்.

இவரது பாடி லேங்குவேஜ் பார்த்து பாக்யராஜ் முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

அந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் பாராட்டு மழையில் நனைந்தார். அதன் பின் இவருக்கு தொடர் படங்கள் கிடைத்தன.

மேலும் எம்ஜிஆர் நேரடியாக வந்து இவரை பார்த்து பாராட்டினார்.

80 90 காலகட்டங்களில் தொடர் படங்களில் நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்.

இவரின் மிகப்பெரிய ஆசை குறைந்தது 500 படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது தான் ஆனால் இவர் ஆசை நிறைவேற முடியாமலேயே போனது இவர் கடைசியாக அபூர்வ தீவு என்ற திரைப்படத்தில் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா உலகில் சிறப்பாக வந்தாலும் அவர் எடுத்த ஒரே ஒரு தவற முடிவால் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

அது என்னவென்றால் தனது மொத்த காசையும் போட்டு விஜயா புரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு கம்பெனிக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார்.

இந்த கம்பெனி “மண்ணில் இந்த காதல்” என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தது ஆனால் திரைப்படம் வெளிவந்து படுதோல்வி அடைந்ததால் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்ததோடு சொந்த வீட்டையும் விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார் அதன்பிறகு சினிமாவில் இவர் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.