வருகின்ற 20 ஓவர் உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதை எதிர்நோக்கி இந்திய வீரர்கள் மற்றும் இந்திய அணி காத்திருக்கிறது. முன்பாக ஐபிஎல் போட்டியை தற்போது வெகு விரைவிலேயே முடிக்க இருக்கிறது அதை முடித்த கையோடு இந்திய அணி குறிப்பிடப்பட்ட வீரர்கள் இந்த 20 ஓவர் உலக கோப்பையில் அசத்த இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக விளங்கும் ரவி சாஸ்திரியின் ஆண்டு காலம் முடிய இருப்பதால் புதிய பயிற்சியாளராக யாரை எடுக்கலாம் என பிசிசிஐ தற்போது முடிவெடுத்துள்ளது அந்த வகையில் ஓவர் உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் தென்னாபிரிக்காவுடனான போட்டியில் இந்திய அணி புதிய பயற்சியாளருடன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ரவிசாஸ்திரி ஓய்வு காலம் முடிந்தவுடன் அவர் இடத்தில் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க தற்போது விண்ணப்பித்து உள்ளவர்கள் கும்பிளே மற்றும் லட்சுமணன் ஆகியோர் இந்தியாவிலிருந்து விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் வீரனான டாம் மோடியும் தற்பொழுது ஆசை தெரிவித்துள்ளார் ஆனால் பிசிசிஐ தலைவரான கங்குலி இந்திய முன்னாள் வீரர்களுக்கு தான் பயிற்சியாளர் பதவியை கொடுப்பதாக தெரிய வருகிறது.
அந்த காரணத்தினால் நிச்சயம் கும்பிளே -க்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திராவிட் இந்த விண்ணப்பத்தில் கலந்து கொண்டு இருந்தால் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் ஆனால் அவரோ இதிலிருந்து விலகி u19 கோட்ச்சராக இருப்பதால் இந்த விண்ணப்பத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.