நடிப்பிற்கு முன்னோடியாகத் திகழ்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். இவர் நடிப்பதற்காகவே பல விருதுகளை வாங்கியவர். சிவாஜி நடிப்பில் உருவாகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தன. அதுமட்டுமில்லாமல் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு சிவாஜியின் நடிப்பிற்காக மட்டுமே திரைப்படத்தை காண கூட்டம் அலை மோதியது.
என்னதான் சினிமா தோன்றிய பல வருடங்கள் ஆனாலும் இன்னும் அசைக்க முடியாத சாதனையை நடிகர் சிவாஜி கணேசன் படைத்துள்ளார் பொதுவாக நடிகர் சிவாஜிகணேசன் எமோஷன் காட்சிகளில் பட்டையை கிளப்புவார். இந்த நிலையில் சிவாஜி கணேசனின் மிகப்பெரிய சாதனை ஒன்றை இங்கே காணலாம்.
வீரபாண்டியன் கட்டபொம்மன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஆங்கிலேயரை விரட்டி விரட்டி அடிக்கும் காட்சியை பார்த்துவிட்டு எகிப்து நாட்டின் பிரதமர் ஜமால் அப்துல் நாசர் என்பவர் உடனே சிவாஜி அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என ஆசை பட்டுள்ளார்.
உடனே இந்திய நாட்டின் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்களிடம் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் நடித்த சிவாஜியை பார்க்க அனுமதி கொடுக்க வேண்டுமென கேட்டுள்ளார் அதன் பிறகு அனுமதி கிடைத்தவுடன் சிவாஜியை நேரில் பார்த்து நடிப்பிற்காக பாராட்டியுள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் ஒரு நடிகரை வேறு நாட்டின் ஜனாதிபதி நேரில் சந்திக்க வேண்டும் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ஆச்சரியமாக பார்த்தார்கள். கடல் கடந்து சிவாஜியை சொந்த நாட்டில் அயல் நாட்டுக் காரர்கள் வந்து பார்த்த பெருமை சிவாஜிகணேசனை தான் சேரும்.
சிவாஜிகணேசன் நடிப்பை தாண்டி பல சாதனைகளை படைத்துள்ளார்.