Captain Vijayakanth: மறைந்த நடிகர் விஜயகாந்த் பொதுவாக அனைவருக்கும் உதவி செய்யும் குணமுடையவர் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல பிரச்சனைகளையும் அவமானங்களையும் சந்தித்தார் எனவே தன்னைப்போல் சினிமாவிற்கு அறிமுகம் ஆகுபவர்கள் பிரச்சனைகளை சந்திக்கக் கூடாது என தன்னால் முடிந்தவரை சினிமாவிற்கு அறிமுகமாகும் பலருக்கும் உதவி செய்தார். அந்த வகையில் கேப்டனால் சினிமாவில் பிரபலமான ஐந்து வில்லன் நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.
மன்சூர் அலிகான்: டான்ஸ் மாஸ்டராகவும், ஸ்டன்ட் மாஸ்டராகவும் பணியாற்றி வந்த மன்சூர் அலிகானுக்கு 1991ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பு கொடுத்து விஜயகாந்த் தான் இதன் மூலம் மன்சூர் அலிகான் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
பொன்னம்பலம்: விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த செந்தூரப்பாண்டி படத்தில் தான் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த விஜயகாந்த் இப்படத்தில் பொன்னம்பலம் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்து அதேபோல் நல்ல சம்பளமும் கிடைத்ததாம்.
சோனு சூட்: 1999ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் கள்ளழகர் படத்தில் லைலா, சோனு சூட், ரியாஸ் கான், மணிவண்ணன், நாசர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் சோனு சூட் வில்லனாக நடிக்க கொஞ்சம் உடம்பு ஏற்ற ஒரு மாதம் தேவைப்பட்டதாம் விஜயகாந்த் நினைத்திருந்தால் அந்த படத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்திருக்கலாம் ஆனால் சோனு சூட்டுக்காக காத்திருந்து பொறுமையாக படத்தை எடுத்தாராம்.
சலீம் கௌசி: சலீம் கௌசிக்கு மார்க்கெட் குறைந்த நேரத்தில் சின்ன கவுண்டர் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பு விஜயகாந்த் பெற்று தந்துள்ளார். இப்படம் 1992ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இவ்வாறு இதில் வில்லனாக நடித்த சலீம் கௌசிக் இப்படம் திருப்புமுனையாக அமைய சின்ன கவுண்டர் படத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களில் வில்லனாக நடித்து மிரட்டினார்.
ஆனந்த் ராஜ்: நடிகர் விஜயகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ஆனந்த் ராஜிற்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுத் தந்து சினிமாவில் வளர்வதற்கு ஒரு முக்கிய நபராக இருந்துள்ளார்.