இந்திய சினிமாவில் இருக்கும் டாப் ஹீரோக்களின் படம் அசால்டாக 200 கோடி ரூ.300 கோடி எல்லாம் வசூல் செய்துவிடும்.. ஆனால் ஒரு சில படம் மட்டும் அதையும் தாண்டி வசூல் செய்யும் அந்த படங்கள் சொந்த மொழியை தாண்டி பிறமொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றால் மட்டுமே 500 கோடி, 1000 கோடி வசூல் செய்ய முடியும்..
அந்த வகையில் இந்திய சினிமாவில் முதல் ஆயிரம் கோடியை தொட்ட திரைப்படம் அமீர்கானின் “தங்கள்” திரைப்படம் தான் அதன் பிறகு பாகுபலி 2, RRR, கே ஜி எஃப் 2 போன்ற படங்கள் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தன. இப்பொழுது ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக இருந்தது.
படம் வெளிவந்து ஹிந்தியையும் தாண்டி அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது இதுவரை மட்டுமே 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாம்.. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள் தான் 1000 கோடி வசூல் செய்துள்ளன ஆனால் தற்பொழுது தமிழிலும் அது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் அந்த அளவிற்கு பிரம்மாண்ட பட்சத்தில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகின்றன அது குறித்து பார்ப்போம்.. லோகேஷ் இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன குறிப்பாக கடைசியாக எடுத்த விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதால்..
அடுத்த படமான “லியோ” படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இந்த படம் சிறப்பாக அமையும் பட்சத்தில் 1000 கோடி வசூல் செய்யும் என கணிக்கப்படுகிறது. சூர்யாவின் 42 திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஒரு வரலாற்று படமாக உருவாகுவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றியடைந்ததால் அதன் அடுத்த பாகமும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இந்தியன் 2, ரஜினியின் ஜெயிலர் ஆகிய படங்களுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இதில் எந்த படங்கள் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.. ரசிகர்களே உங்கள் கருத்து என்ன எந்த படம் 1000 கோடி வசூல் செய்யும்..