தமிழ் சினிமாவின் அன்றைய காலகட்டத்திலிருந்து இன்றைய காலகட்டம் வரை பல பாடகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் பாடிய முதல் பாடல் இன்று வரைக்கும் சில பேருக்கு தெரியாமல் இருந்து வருகிறது. அப்படி 90s காலகட்டத்தில் பாடிய தமிழ் பாடகர்கள் பாடிய முதல்பாடல்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
பாலசுப்பிரமணியம்: இவர் பாடிய முதல் பாடல் “இயற்கை என்னும் இளைய கன்னே” இந்த பாடல் “சாந்தி நிலையம்” என்ற திரைப்படத்தில் உள்ளது.
சுவர்ணலதா: இவர் பாடிய முதல் பாடல் “சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா” என்ற பாடலை பாடியுள்ளார் இந்தப் பாடல் “நீதிக்கு தண்டனை” என்ற திரைப்படத்தில் உள்ளது.
ஜானகி : இவர் பாடிய முதல் பாடல் “உலகமிதுவே உலமப்பா” என்ற பாடலை பாடியுள்ளார் இந்த பாடல் “விதியின் விளையாட்டு” என்ற திரைப்படத்தில் உள்ளது.
சுஜாதா மோகன்: இவர் பாடிய பாடல் காதல் ஓவியம் கண்டேன் அன்பே” என்ற பாடலை தான் முதலில் பாடியுள்ளார். இந்தப் பாடல் கவிக்குயில் என்ற திரைப்படத்தில் உள்ளது.
சித்ரா : இவர் பாடிய முதல் பாட்டு பூஜைக்கேத்த பூவிது” என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் நீ தானா அந்த குயில் என்ற திரைப்படத்தில் உள்ளது.
சுசிலா: இவர் பாடிய முதல் பாடல் எதுக்கு அழைத்ததை என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் பெற்ற தாய் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
கே ஜே. யேசுதாஸ் : இவர் பாடிய முதல் பாடல் ஆசை வந்த பெண்ணே ” என்ற பாடலை பாடியுள்ளார் இந்த பாடல் கொஞ்சும் குமரி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
கார்த்திக் : இவர் பாடிய முதல் பாடல் அடி நேந்துகிட்டேன் ” என்ற பாடலை பாடியுள்ளார் இந்த பாடல் ஸ்டார் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.