என்னதான் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கி வந்தாலும் ஒரு சில இயக்குனர்கள் சர்ச்சை இயக்குனர் என பெயர் எடுத்து விடுகிறார்கள் அந்த வகையில் பல விமர்சனங்களை பெற்ற இயக்குனர் தான் மோகன் இவர் திரௌபதி திரைப்படத்தை இயக்கி மக்களிடையே பல விமர்சனங்களை பெற்றாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் அடுத்ததாக ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்திலும் திரௌபதி திரைப்படத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி தான் கதாநாயகனாக நடித்துள்ளார் மேலும் இவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி தர்ஷா குப்தா நடித்துள்ளாராம்.
அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை ஜிஎம் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி பின் இசையமைத்துள்ளார்.இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகவேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.
அதேபோல் தற்பொழுது இந்த திரைப்படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.ஆம் இந்த திரைப்படத்தின் அடுத்த அப்டேட் என்னவென்று கேட்டால் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும்.தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி பார்த்தால் ஜீபின் இசையில் இசையமைப்பாளர்.
ஜீபின் இசையில், Gv பிரகாஷ் குமார் குரலில் "அம்மாடி" என்ற முதல் பாடல் செப்டம்பர் 10 அன்று வெளியாகும்.. #ருத்ரதாண்டவம்#RudraThandavam @mohandreamer @richardrishi @menongautham @DharshaGupta @jubinmusic @SOUNDARBAIRAVI @ProBhuvan @Gmfilmcorporat1 @7GFilmsSiva @ayngaran_offl pic.twitter.com/rSCBoipwGb
— Ramesh Bala (@rameshlaus) September 7, 2021
ஜிவி பிரகாஷ் பாடியுள்ள அம்மாடி என்ற முதல் பாடல் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளதால் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் தற்போது ஒரே உற்சாகத்தில் குதித்து வருகிறார்கள்.