தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு இவர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தே சினிமாவில் பயணித்து வருகிறார் அந்த வகையில் இவர் ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் பெரும்பாலும் காதல் திரைப்படமாக அமைந்தது தான் காரணமாக இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உருவாக வழிவகுத்தது.
இந்நிலையில் நமது நடிகர் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் தற்போது இரண்டாவது போஸ்டர் கூட வெளியிடப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கமிருக்க சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற பல திரைப்படங்களில் நடித்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் அதுமட்டுமில்லாமல் இவர்களின் கூட்டணி ஒருபோதும் தோற்றதே கிடையாது இந்நிலையில் சிம்புவின் 47வது திரைப்படமும் மிகப் பெரிய வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான் இசையமைக்க உள்ளார் மேலும் பாடல்களை தாமரை எழுதியுள்ளார் மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பாணியில் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த திரைப்படத்தின் போஸ்டரை பார்த்து கண்டறியப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு தன்னுடைய உடல் எடையை 15 கிலோ குறைத்து விட்டு சிறு வயது பையன் போல் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது சிம்புவா இது என பலரையும் ஆச்சரியமூட்டும் அளவிற்கு இருப்பது மட்டுமில்லாமல் சுமார் 16 17 வயது உள்ள சிறுவர் போல் காட்சி அளிக்கிறார்.
இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பாடல் ஒன்று சிம்புவின் குரலில் இணையத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.