நடிகர் அஜித்குமார் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் நம்பி படங்களில் நடித்ததால் நிறைய தோல்வி படங்களை கொடுத்தவர் ஆனால் அண்மை காலமாக படத்தின் கதையைக் கேட்டு நடிப்பதால் அஜித் நடிப்பதால் அவரது படங்கள் ஹிட் அடிக்கின்றன.
இப்பொழுது அஜித்தை தொடர்ந்து படங்களில் நடித்தாலும் படத்தின் புரமோஷனுக்கு மட்டும் கலந்து கொள்வதை தவிர்க்கிறார்கள் ஆரம்ப காலகட்டத்தில் அவர் அப்படியில்லை. ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் அஜித்குமார் படங்களில் நடித்தாலும் படத்தின் புரமோஷனுக்காக பல தொலைக்காட்சிகளில் கலந்து கொள்வார் படம் பற்றியும் தனது அனுபவங்களையும் பகிர்வது வழக்கம்.
இப்போது அஜீத் புரமோஷன் வேலைகளில் ஈடுபடுவது இல்லை. அப்படி பில்லா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு புரமோஷனுக்காக சந்தானம் தொகுப்பாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கினார் இதில் பல விஷயங்களை அஜித் கூறினார் அதில் ஒன்று என்னுடைய சினிமா கேரியரில் மிக முக்கியமான நபர் யார் என்றால் அது ஷாலினி தான்.
அதேசமயம் சினிமா உலகில் எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர் நடிகை ஷாலினி. அப்படித்தான் எனது படங்கள் நன்றாக இருக்கு.. இல்லை.. என வெளிப்படையாக கூறி விடுவார் எனது நண்பர்கள் கூட படம் சரியில்லை என்றால் சற்று சூசகமாக சொல்வார்கள் ஆனால் சாலினி அப்படி கிடையாது நெத்தியடியாக பதில் கூறி விடுவார் படம் நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை நன்றாக இருக்கிறது என்றால் நன்றாக இருக்கும் என்பது அவரது ஸ்டைல் என கூறினார்.
ஷாலினி எனது வாழ்வை மாற்றி அமைத்தவர் அவருக்காக நான் பல விஷயங்களை மாற்றி உள்ளேன் எனக்கு சிகரெட் அடிப்பது பிடிக்கும் ஆனால் ஷாலினிக்கு பிடிக்காத காரணத்தினால் நான் புகைப்பிடிப்பதை விட்டு விட்டேன் எனவும் கூறினார்.