அஜித் தந்தை இறந்ததை கேட்டு முதல் ஆளாக ஓடிவந்த சினிமா பிரபலம் யார் தெரியுமா.? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த செய்தி

ajith
ajith

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் அஜித் குமார். இவர் சமீப காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அசால்டாக 200 கோடி அள்ளுகின்றன அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த துணிவு திரைப்படம் கூட சமூக அக்கறை கலந்த ஒரு படமாக இருந்ததால்..

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 230 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது. அதனை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்து தனது 62 ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.  இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளாராம்..

அதற்கான அறிவிப்பு வெகு விரைவிலேயே வரும் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் அப்பா சுப்ரமணியம் அவர்கள் பக்கவாத காரணத்தினால்.. மருத்துவமனையில் சில காலங்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 4:30 மணி அளவில் தூங்கும் பொழுது இறந்து விட்டார் என கூறப்பட்டது.

இந்த தகவல் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரலாகி அஜித் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது விஷயத்தை கேள்விப்பட்ட ஒரு சிலர் நேராக சென்று அஞ்சலி செலுத்தினர் வரமுடியாதவர்கள் டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்தனர். இந்த நிலையில் அஜித்தின் அப்பா சுப்ரமணியம் அவர்கள் இறந்ததை கேட்டு முதல் ஆளாக ஓடியது யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அஜித்தின் அப்பா இறந்ததை கேட்ட முதல் ஆளாக ஓடியது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான். அதன் பிறகு தான் மற்ற பிரபலங்கள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது ஏன் தளபதி விஜய் கூட நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் இவர் சென்ற பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.