“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முதல் முக்கிய பிரபலம் – வருத்தத்தில் உள்ள மற்ற போட்டியாளர்கள்.

cook with komali
cook with komali

சின்னத்திரையில் பொழுதுபோக்கிற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் மக்கள் அனைவரின் ஃபேவரட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று சிறப்பாக நிறைவடைந்ததை..

தொடர்ந்து தற்போது சில வாரங்களுக்கு முன்புதான் குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கப்பட்டது.  கடந்த சீசன்களில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் மீடியா உலகில் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் சிறப்பாக பயணித்து வருகின்றன. இந்தநிலையில் அண்மையில் தொடங்கப்பட்ட மூன்றாவது சீசனில் போட்டியாளராக 10 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கோமாளியாக வழக்கம்போல் புகழ், சிவாங்கி, மணிமேகலை, பாலா போன்றவர்களும் மேலும் சில புதிய பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.  வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு நாட்களில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார்கள்.

அதில் கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் எதுவும் இல்லாமல் குக்குகளும் கோமாளிகளும் ஜாலியாக சமைத்து வந்தனர். இந்த நிலையில் சென்ற வாரம் நடைபெற்ற போட்டியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் முதல் போட்டியாளராக ராகுல் தாத்தா வெளியேறிவிட்டார்.

ராகுல் தாத்தாவுக்கு கோமாளியாக சென்ற வாரம் மணிமேகலை ரெடின் கிங்ஸ்லி கெட்டப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் தாத்தா வந்த சில வாரங்களிலே இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது போட்டியாளர்கள் மற்றும் மக்கள் என பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது.