நயன்தாராவை அடுத்து அஞ்சலியை டாவடிக்க போகும் யோகி பாபு பூச்சாண்டி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.!!

yogibabu

yogibabu and anjali  starring in puchandi movie first look poster: தமிழ் திரையுலகில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் யோகிபாபு. இவர் திரையுலகிற்கு யோகி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து வேலாயுதம், பட்டத்துயானை, சூதுகவ்வும், மான்கராத்தே, யாமிருக்க பயமேன், காக்கி சட்டை போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம்  ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

தற்போது இவர் ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் அதிலும் குறிப்பாக இவர் நடித்திருந்த கோலமாவு கோகிலா, கூர்கா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.

தற்போது இவர் பேய்மாமா, மண்டேலா என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் சன் தொலைக்காட்சியில் வெளியாகிறது.

மேலும் யோகி பாபு அஞ்சலியுடன் பூச்சாண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது.

இதில் யோகி பாபு அஞ்சலியை ஒருதலையாக காதலிப்பது போல் நடித்துள்ளார். இதோ அந்த போஸ்டர்.

yokipapu
yokipapu