மிரட்டலாக வெளிவந்த “பொன்னியின் செல்வன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.! நடிகர் விக்ரமா இது.?

ponniyin-selvan-
ponniyin-selvan-

இயக்குனர் மணிரத்தினம் 90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு விதமான சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இவர் இயக்கும் படங்கள் பெரிதும் உண்மை மற்றும் நாவலை மையமாக தழுவிய படங்களாக தான் இருந்து வந்துள்ளன அந்த படங்கள் மக்கள் மத்தியில் வெற்றியை பெற்றுள்ளது.

தற்பொழுது கூட முன்னணி இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளார் முதல் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகியுள்ளது படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், நாசர், லால்,  விக்ரம், பிரபு, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, கார்த்தி, ரியாஸ் கான், கிஷோர், பார்த்திபன் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்த அசத்தி உள்ளனர். இந்த படம் தற்போது மிக பிரம்மாண்ட பொருள் செலவில்  உருவாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படம் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளிவருவதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்து இழுக்க படக்குழு ஆடியோ லான்ச் மற்றும் டீசர்  போன்றவற்றை வெளியிட வேலை பார்த்து வருகிறது இந்த சமயத்தில் படத்தை மிகப் பிரமாண்ட பொருள் செலவில் லைக்கா  தயாரித்து உள்ளது.

இந்த நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நடிகர் விக்ரமின் கெட்டப்பை வெளியிட்டு உள்ளது மேலும் சில பதிவுகளையும் போட்டுள்ளது. அதில் சோழ பட்டத்து இளவரசனை வரவேற்கிறோம் கடுமையான போர் வீரன் காட்டுப்புலி… ஆதித்த கரிகாலன் என கூறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய போஸ்ட்டரை..