தெனாலி படத்தில் “ஜெயராம்” கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த ஹீரோ.! யார் தெரியுமா.? பல வருடங்கள் கழித்து வெளியாகும் சூப்பர் செய்தி.

kamal and jeyaram
kamal and jeyaram

90 காலகட்டங்களில் இருந்து தற்பொழுது வரையிலும் பல்வேறு விதமான சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கான திறமையை வெளிக் காட்டிக் கொண்டு வருபவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்.

இவர் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடிப்பதால் இன்றளவும் இவரது பெயர் உச்சத்திலேயே இருக்கிறது.

இந்த நிலையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளியான திரைப்படம் தெனாலி என்ற திரைப்படத்தில் கமல், ஜோதிகா, மீனா, ஜெயராம் மற்றும் பல காமெடி நடிகர்கள் போன்றவர்கள் நடித்து படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

அதிலும் குறிப்பாக ஜெயராம் மற்றும் கமல் ஆகியோர் சந்திக்கும் காட்சிகள் காமெடி உச்சத்தில் இருக்கும் அந்த அளவிற்கு சிரிக்க வைத்திருப்பார்கள். கமல் இந்த திரைப்படத்தில் இலங்கை தமிழ் பேசுவராகவும் அதே சமயம் ஒரு பயப்படும் மனிதராகவே இருப்பார்.

அது பலருக்கும் பிடித்து போனதால் பல ரசிகர்கள் கூட்டம் இலங்கை தமிழ் பேச ஆரம்பித்தனர் அந்த அளவிற்கு அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கமல். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஈடு இணையாக நடித்தார் நடிகர் ஜெயராம் தெனாலி படத்தில் சிறப்பாக நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முதன் முதலில் ஜெயராம் கதாபாத்திரத்தில் நடிக்க  கேஎஸ் ரவிக்குமார் அணுகியது என்னமோ டாப் ஸ்டாரான மோகன்லாலை தான் ஆனால் அப்பொழுது அவர் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் அந்த வாய்ப்பு உடனடியாக ஜெயராமுக்கு கிடைத்தாம்.