Lokesh Kanagaraj : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இதுவரை ஐந்து படங்களை எடுத்திருக்கிறார் அந்த ஐந்து படங்களுமே மக்கள் கொண்டாடும் படமாக இருந்துள்ளது கடைசியாக வெளியான லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது.
அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து தலைவர் 171 படத்தை எடுக்க உள்ளார். அதற்கான வேலைகளை தான் தற்பொழுது லோகேஷ் தொடங்கியிருக்கிறாராம் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் ஜீவனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒரே தட்டில் சாப்பாடு.. அண்ணன் தம்பி போல் பழகிய நடிகரை கடைசி நேரத்தில் பார்க்காமல் போன எம் ஜி ஆர்
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி தயாரிப்பாளராக அடி எடுத்து வைத்துள்ளார் அந்தப் படம் குறித்து தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது இன்று நவம்பர் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தெரிவித்துள்ளது மேலும் லோகேஷ் கனகராஜ் வழங்க விஜய் குமார் மற்றும் கேங் என குறிப்பிட்டுள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஹீரோ யார் என்பதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் அவர்கள் வேறு யாரும் அல்ல இயக்குனரும், நடிகருமான விஜயகுமார் தான் இந்த படத்தில் ஹீரோ என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
எனக்கு இருக்கிற தில்லு ஈஸ்வரி கிட்ட இருக்கா.? குணசேகரனை அவமானப்படுத்தும் சாருபாலா.!
விஜயகுமார் இதற்கு முன்பு உறியடி, உரியடி 2 ஆகிய படங்களை இயக்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
And here’s our first presentation, with @Vijay_B_Kumar and Gang!!
First Look out on 29th November at 6 PM 👊🏻@Dir_Lokesh @reelgood_adi @Abbas_A_Rahmath @reel_good_films #GovindVasantha @editorKripa @leonbrittodp #kannanganpat @renganaath_R @VickyStunt_dir #Ezhumalai… pic.twitter.com/Yuofg4xGOf
— GSquad (@GSquadOffl) November 28, 2023