ரசிகர்களை புலம்பவிடும் பீஸ்ட் படத்தின் முதல்நாள் டிக்கெட் விலை.! எவ்வளவு தெரியுமா.?

vijay
vijay

கொரோனா மூன்றாவது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் தொடர்ந்து தற்போது திரையரங்கில் படங்கள் வெளியாகின்றன அதிலும் குறிப்பாக டாப் நடிகரின் படங்கள் வெளிவந்து அசத்துகின்றன அந்த வகையில் அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் இப்போது விஜய்யின் பீஸ்ட் ஆகிய திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

இந்த படம் விஜய்க்கு 65 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை தனக்கே உரிய பாணியில் நெல்சன் இயக்கி உள்ளார் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது அனிருத் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட் படத்தில விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், ரெட்டின் கிங்ஸ்லி, யோகி பாபு, செல்வராகவன் மற்றும் பல டாப் நடிகர்,  நடிகைகள் நடித்துள்ளனர். படம் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது இந்த படத்தின் டிரைலர் கூட அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சில முக்கிய இடங்களில்  பீஸ்ட் படத்தின்  முன்பதிவுகள் ஜோராக நடைபெற்று வருகின்றன அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் 12 ஆம் தேதி  மாலையே  திரைப்படம்  வெளியாகிவிடும் என கூறப்படுகிறது இந்த படத்தின் டிக்கெட் விலை அங்கு 20 டாலராம்.

இந்திய மதிப்பில் பார்த்தால் சுமார் 1500 ரூபாய் என கூறப்படுகிறது. டாப் நடிகர்கள் படங்கள் என்றால் முதல் நாட்களில் டிக்கெட்டின் விலை அதிகமாகத்தான் இருக்கும் தமிழகத்தில் தான் அதிகம் என்று பார்த்தால் அமெரிக்காவில் கூட அதிகமாக இருப்பதுபோல கூறப்படுகிறது.