தெலுங்கு சினிமா உலகில் சமீபகாலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் பல்வேறு படங்கள் வெளிவந்து அசத்துகின்றன. இதற்கு அடித்தளம் அமைத்தவர் முதலில் ராஜமௌலி என்பதுதான் உண்மை ஆம் இவர் பாகுபலி படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்து அசத்தினார் அந்த படத்தின் பட்ஜெட்டை விட அந்த படங்களில் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்தன.
அதனைத் தொடர்ந்து பல சிறந்த இயக்குனர்கள் பலரும் பிரமாண்ட பட்ஜெட்டில் படங்களை எடுத்து அசத்துகின்றனர் இப்படியிருக்க ராஜமௌலியும் தற்போது பாகுபலி மற்றும் பாகுபலி-2 படத்தை தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியவர்களை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் RRR.
படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக நேற்று கோலாகலமாக உலக அளவில் வெளியானது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே முதல் நாளில் மட்டும் சுமார் 200 கோடி அள்ளும் என கணக்கிடப்பட்டது தமிழகத்தில் மட்டும் சுமார் 10 கோடி அள்ளும் என படக்குழு தீர்மானித்திருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிறப்பான விமர்சனத்தை கொடுத்துள்ளனர் படம் 3 மணி நேரம் என்றாலும் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக அமைந்து.
உள்ளதால் மூணு மணி நேரம் போனதே தெரியவில்லை என கூறி வருகின்றனர் அந்த அளவிற்கு நடிப்பிலும் சரி எச்டி தரம் புதிய தொழில் நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்த உள்ளதாம் படம் பார்ப்பதற்கு போரடிக்காமல் விருவிருப்பாக இருப்பதால் படம் 3 மணி நேரம் போவது தெரியவில்லை வேற லெவல் இருப்பதாக கூறினார்.
இந்த படத்திற்கு பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் அடுத்த அடுத்த லெவலுக்கு முன்னேறுவார்கள் எனவும் கூறுகின்றனர் அதேபோல ராஜமௌலியும் இந்த திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய ஒரு உச்சத்தை விடுவார் நான் கூறப்படுகிறது. மொத்தத்தில் RRR படம் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டதாம். இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் சுமார் 12 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.