தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து ஓடுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் திரை உலகில் எத்தனையோ ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார் ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருக்கின்றன அந்த வகையில் பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..
நடிப்பில் கடந்த 2002 ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பாபா.. இந்த திரைப்படத்தில் ரஜினி ஆசை ஆசையாக நடித்தார் அவருடன் இணைந்து மனிஷா கொய்ராலா, ashish vidyarth, விஜயகுமார், நம்பியார், கவுண்டமணி, ரம்யா கிருஷ்ணன், நாசர், பிரபுதேவா, சங்கவி, ராதாரவி, தீபா..
வெங்கட், சுஜாதா, ரியாஸ் கான், சரத் பாபு, கருணாஸ் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். ஆனால் படம் வெளிவந்து மோசமான தோல்வியை சந்தித்தது. அனால் இந்த படத்தை ஒரு வெற்றி படமாக மாற்ற வேண்டுமென ரஜினி பல காலங்கள் நினைத்து வந்த நிலையில் தற்போது அதை நிறைவேற்றியும் உள்ளார்.
அண்மையில் ரஜினி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உடன் கலந்து பேசி பாபா படத்தில் சில திருத்தங்கள் செய்து படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்தார். படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது ரீ ரிலீசான பாபா திரைப்படம் முதல் நாளில் நல்ல வசூலை அள்ளி உள்ளது.
பாபா திரைப்படம் முதல் நாளில் மட்டுமே சுமார் 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன இன்னும் வருகின்ற நாட்களில் பாபா படத்தின் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் ரஜினியும் சரி, பாபா படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் சரி செம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனாராம்.