2022 ஆம் ஆண்டு பல நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது குறிப்பாக திரையுலகில் உச்ச நட்சத்திர நடிகர்களாக இருக்கும் சிவகார்த்திகேயன் அஜித், விஜய், கமல், கார்த்தி, விக்ரம், தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களின் படங்கள் வெளிவந்து வசூல் ரீதியாக வெற்றி பெற்றன.
இவர்களைத் தொடர்ந்து புதுமுக நடிகர்களுக்கும் தற்போது நல்ல ஆண்டாக அமைந்துள்ளது அந்த வகையில் கோமாளி படத்தை இயக்கி வெற்றிகண்ட பிரதீப் ரெங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே இந்த திரைப்படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, பிரவீனா ரவி, இவானா, ஃபைனலி பாரத், ஆதித்யா கதிர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய லவ் டுடே திரைப்படம் நல்ல வரவேற்பை முதல் நாளே பெற்றுள்ளது.
இந்த திரைப்படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறும் என பலரும் கூறி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் லவ் டுடே திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் அள்ளியது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன் படி பார்க்கையில் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் 4.5 கோடி வரை வசூல் சாதனை படைத்திருக்கிறதாம்..
வருகின்ற நாட்களிலும் லவ் டுடே திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது முதல் நாளே ஒரு அறிமுக ஹீரோவின் படம் 4.5 கோடி வசூல் செய்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து உள்ளது குறிப்பாக முன்னணி நடிகர்களுக்கு சற்று பீதியை கொடுத்து இருக்கிறது என பலரும் கூறி வருகின்றனர்..