இந்த ஆண்டின் “முதல் பிளாக்பஸ்டர்” திரைப்படம் துணிவு தான்.. அடித்து கூறிய பிரபல தயாரிப்பாளர்

thunivu
thunivu

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு ஹிட் படத்தை கொடுத்து விடுகின்றனர் அந்த வகையில் இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின.  இரண்டு படமே சிறப்பாக இருந்ததால்..

ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அஜித்தின் துணிவு திரைப்படம் ஆக்சன், மாஸ், சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல பாராட்டை பெற்று.. வசூலில் பட்டையை கிளப்புகிறது.

அஜித்தின் கேரியரில் அதிக வசூல் செய்தபடமாக துணிவு மாறியுள்ளது இதனால் படகுழுவும் சரி, அஜித்தும் சரி இருக்கிறார். இதே சந்தோஷத்துடன் அடுத்த திரைப்படத்தில் அஜித் நடிக்க ரெடியாக இருக்கிறார். ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த படம் மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்த நிலையில் ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாட மறுபக்கம் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவை ஒன்றைப் போட்டு உள்ளார்.

அதில் அவர் சொன்னது 2023 ஆம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படம் துணிவு தான் என கூறினார் மேலும் அதில் “ரியல் வின்னர் துணிவு” என குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது சமூக வலைதள பக்கத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது