“நானும் ரௌடி தான்” படத்தில் நயன்தாராவுக்கு பதில் முதன்முதலில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா.? வெளியான தகவல்.!

naanum rowdy thaan
naanum rowdy thaan

இயக்குனர் விக்னேஷ் சிவன்  முதலில் நடிகர் சிம்புவை வைத்து போடா போடி என்ற படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் காமெடி, காதல் கலந்த படங்களை கொடுத்து தன்னை வெளி உலகத்திற்கு தொடர்ந்து கட்டிக் கொண்டே இருந்தார்.

மேலும் இவர் இப்படத்திற்காக ரசிகர்களும் உருவாகத் தொடங்கினார் ஒரு சமயத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரௌடி தான் படத்தின் கதையை உருவாக்கினார் இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க காமெடி கலந்த காதல் படமாக உருவாகி இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது.

மேலும் இந்த படம் அதிக நாட்கள் ஓடியது ஒரு நல்லதொரு வசூலை பெற்றுத் தந்தது ஆனால் இந்த படம் உருவாகுவதற்கு முன் கதையை  விக்னேஷ் சிவன் பல  நடிகர், நடிகைகளிடம் சொல்லி உள்ளார். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். நான் ரௌடி தான் கதையை  விக்னேஷ் சிவன்  உருவாக்கிய பிறகு முதலில் கௌதம் கார்த்திக் மற்றும் நஸ்ரியாவிடம் கூறியுள்ளார்.

இருவருக்கும் அந்த கதை பிடித்துப்போய் இருந்தாலும் கடைசி நேரத்தில் நடிக்க முடியாமல் போனதாம் அவர்களை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் மலையாள நடிகர் நிவின் பாலியை சந்தித்து அந்த கதையை கூறியுள்ளார்.  கதை அவருக்கு பிடித்து போய் இருந்தாலும் அவரால் நடிக்க முடியாமல் போனது அவரைத் தொடர்ந்து தமிழ் நடிகர் ஜெய் அவர்களிடம் இந்த கதையை கூறியுள்ளார்.

அவரும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் பின் தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து உட்கார்ந்திருந்த விஜய்சேதுபதியுடன் இந்த கதையை கூறி உள்ளார் அவருக்கு ரொம்பப் பிடித்துப் போகவே நானும் ரௌடி தான்  கதையில் நடிக்க உடனடியாக ஆர்வம் காட்டினார் படம் எடுக்கப்பட்டு  ரிலீஸ்ஸாகி மாபெரும் ஹிட்டடித்தது விஜய்சேதுபதி கேரியரில் மிக முக்கியமான படமாகவும் அமைந்தது.