இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களை இயக்கிய இருந்தாலும் அவருக்கு ஒரு கனவு இருந்தது அதுதான் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் ஒரு வழியாக பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து 500 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்திருந்தார்.
படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் சூப்பராக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு படத்தை பார்த்து வருகின்றனர் நான்கு நாட்கள் முடிவில் மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் 250 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது.
வருகின்ற நாட்களிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பிரமாண்டமான ஒரு வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஓடிக்கொண்டிருக்க பொன்னியின் செல்வன் படத்தை பல்வேறு திரைப்படங்கள் வெளிவர ரெடியாக இருந்தன ஆனால் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திற்கான மவுசு குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருப்பதால்..
மற்ற படங்கள் தற்போது பின்னுக்கு வாங்கி உள்ளது. குறிப்பாக ஒரு சில முக்கிய படங்கள் பின்வாங்கியுள்ளன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். அருண் விஜய் நடிப்பில் உருவான பார்டர் திரைப்படம் பின்வாங்கி உள்ளது. இந்த படம் அக்டோபர் ஏழாம் தேதி படத்தை வெளியிட இருக்கிறதாம் அதேபோல சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் நடித்துள்ள காபி வித் காதல் திரைப்படமும்..
அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது மேலும் அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்துள்ள சதுரங்க வேட்டை 2 திரைப்படமும் அதே தேதியில் வெளிவர இருக்கிறதாம். சிவா, பிரியா ஆனந்த் நடித்த காசேதான் கடவுளடா மற்றும் ரீ போன்ற படங்களும் தேதியை பின் வாங்கி இருக்கின்றன.