பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கும் போகும் எஸ். ஜே. சூர்யா – சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

shankar-and-s.j.-surya
shankar-and-s.j.-surya

நடிகர் எஸ் ஜே சூர்யா சமீபகாலமாக படங்களை இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி மேல் வெற்றியை கொடுத்த தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி உள்ளார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப் படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார் அந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்தது அதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் அவரது நடிப்பு வியக்க வைக்கும் வகையில் இருந்ததால் சினிமா பிரபலங்கள் அடுத்த அடுத்த வாய்ப்பை அள்ளிக் கொடுக்கின்றனர். மாநாடு திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா 3 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதால் தற்போது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

அந்த வகையில் தமிழில் பிரமாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்தி இருக்கும் இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் முதல் முதலாக அடி எடுத்து வைத்து டாப் நடிகர் ராம் சரணுக்கு கதைசொல்லி தற்போது ஒரு படத்தை எடுத்து வருகிறார். அந்த படத்திற்கு RC 15 என தற்போது தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது இந்தப் படத்திற்க்கு சம்பளமாக சுமார் 9 கோடி கேட்டு உள்ளார் ஆனால் தயாரிப்பாளர் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு திறமையை பார்த்து விட்டு அவருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் காசு கொடுக்கலாம் அவர் இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும்.

என ஒரே அடியாக சொல்லி உள்ளதால் சம்பளத்தைக் குறைக்காமல் வேறு வழி இன்றி 9 கோடி சம்பளம் கொடுத்து அவரை கமிட் செய்து உள்ளது படக்குழு. இயக்குனர் ஷங்கர் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு சம்பளம் கேட்பார் என்று ஆனால் தற்போது எஸ் ஜே சூர்யாவுக்கு நல்ல மார்கெட் இருப்பதால் அதை பயன்படுத்திக்கொண்டு சூர்யா எவ்வளவு தன்னால் காசை உயர்த்திக் கொள்ள முடியுமோ உயர்த்திக் கொண்டு வலம் வருகிறார்.