பிகில் படம் 300 கோடி வசூல் செய்ததெல்லாம் “வடிகட்டின பொய்”.? பிரபலம் திட்டவட்டம்.! ஷாக்கான ரசிகர்கள்.

bigil
bigil

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது என்னவோ ஆக்ஷன் படம்தான்.

மேலும் அதிக ரசிகர்களை உருவாக்கி கொடுத்ததும் இதுதான். விஜய் தற்போது ஆக்ஷன் கலந்த திரைப்படங்களை நடித்து வெற்றி கண்டு வருகிறார். அது போன்று ஒரு திரைப்படம் தான் பிகில். இந்த திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளியாகி பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

இந்த திரைப்படத்தை அட்லி இயக்கியிருந்தார் விஜய் இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து அசத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்தார். இவர்களுடன் இணைந்து ஆனந்தராஜ், யோகிபாபு போன்ற பல ஜாம்பவான்கள் நடித்திருந்தனர் படம் வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்தது.

மேலும் பிகில் படம் 300 கோடி வசூல் செய்தது என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பிகில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தற்போது ஒரு செய்தி ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதாவது திருச்சியை சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர் விஜய்யின் பிகில் படம் 300 கோடி வசூல் என்பது எல்லாம் வடிகட்டின பொய் பிகில் படம் வெறும் 130 கோடி மட்டுமே ஈட்டி என தெரிவித்தார்.

மேலும் பெரிய நடிகர்கள் படங்கள் குறித்து வசூல் நிலவரங்கள் எதுவும் உண்மை இல்லை என்றும் ஒரு சிலர் மட்டுமே உண்மையான வசூலை வெளியே கூறுகிறார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.