நடிகர் சிவகார்த்திகேயன் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த நாளில் இருந்து இப்பொழுது வரையிலும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் காமெடி கலந்த சென்டிமெண்ட் படங்களாகவே இருந்து வந்துள்ளன அதனால் அவரது படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுகிறது.
அந்த வகையில் டாக்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அட்லீயின் உதவி இயக்குனர் சிபிசக்கரவர்த்தி உடன் சிவகார்த்திகேயன் கைகோர்த்து நடித்த திரைப்படம் தான் டான். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து பிரியங்கா அருள்மோகன், சமுத்திரகனி, சூரி, எஸ் ஜே சூர்யா, சிவாங்கி என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது.
இந்தப் படத்திலும் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என மூன்றும் கலந்து இருந்ததால் அனைத்து தரப்பட்ட மக்கள் மன்றம் ரசிகர்களுக்கு பிடித்துப்போன படமாக மாறியது இதனால் நல்ல வசூலையும் நாளுக்கு நாள் அள்ளி வருகிறது. இதுவரை தமிழகத்தில் மட்டுமே சுமார் 40 கோடிக்கு மேல் அள்ளி உள்ளது.
வருகின்ற நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் சொல்லப்போனால் 100 கோடி கிளப்பில் டான் திரைப்படம் இணைவது உறுதி என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் டான் படத்தைப் பார்த்துவிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் புகழ்ந்து பேசி வருகிறனர்.
அவர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இந்த படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து சூப்பர்.. சூப்பர்.. பிரமாதம் மிக நல்ல நடிப்பு 30 நிமிடங்களாக என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாக சிவகார்த்திகேயன் தனது தெரிந்த நண்பர்களுக்கு சொல்லி வருகிறாராம். மேலும் சிவகார்த்திகேயன்னும் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறாராம்.