இசையமைப்பாளர்கள் இயக்குனர்கள் எப்படி ஹீரோவாக நடிக்கிறார்களோ அதே போல காமெடியனாக மக்கள் மனதில் இடம் பிடித்த பலரும் ஹீரோவாக நடித்து வெற்றி கண்டுள்ளனர் அந்த வகையில் கவுண்டமணி, சந்தானம் யோகி பாபு என பலர் இருக்கின்றனர் இந்த லிஸ்டில் உள்ளவர் தான்.
வைகை புயல் வடிவேலு. 80 காலகட்டங்களில் இருந்து திரை உலகில் நடித்து வரும் இவர் அஜித் விஜய் ரஜினி கமல் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் காமெடியான நடித்து நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் இப்பொழுதும் பல்வேறு படங்களில் நடிக்கிறார் அதேசமயம் ஒரு சில முக்கியத்துவம் உள்ள கதைகளுக்காக ஹீரோவாகவும் நடித்து வெற்றி கண்டிருக்கிறார்.
அந்த வகையில் இம்சை அரசன், 23ஆம் புலிகேசி, தெனாலிராமன், இந்திரலோகத்தில் நான் அழகப்பன் கடைசியாக கூட நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்து அசத்தினார். இப்பொழுதும் நல்ல கதைகள் இருந்தால் அதில் ஹீரோவாக நடிக்க வடிவேல் ரெடியாக இருக்கிறார்.
ஆனால் இவர் ஒரு சில நல்ல கதைகளையும் தவற விட்டு இருக்கிறார் அப்படி ஒரு சம்பவத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம். 1999 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 150 நாட்கள் ஓடியது இந்த படம் விஜய் கேரியரில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக இருந்தது.
ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க வேண்டியது வடிவேலு தான்.. எழில் இந்த படத்தின் கதையை வடிவேலுவிடம் தான் முதலில் கூறி இருக்கிறார் ஆனால் அவர் வேண்டாம் என தூக்கி எறிய பின் நடிகர் முரளியிடம் இந்த வாய்ப்பு சென்றது அவரும் கைவிடவே கடைசியாக விஜய்க்கு சென்றது விஜய்க்கு இந்த கதை பிடித்து போய் உடனடியாக உருவானதாம்..