அஜித் மிஸ் செய்த திரைப்படம் விக்ரமின் வாழ்க்கையையே திருப்பி போட்ட திரைப்படம். வைரலாகும் மாஸ் தகவல்

ajith-vikram-tamil360newz

ajith missed movie : தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் விக்ரம், இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களம் கொண்டது, அதேபோல் இவர் திரைப்படத்திற்காக தன்னை வருத்தி திரைப்படத்திற்கான கதாபாத்திரமாகவே மாற்றிக்கொள்வார்.

விக்ரம் மற்றும் விஜய் நல்ல நண்பர்கள் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதேபோல் அஜித்தும் விக்ரமிற்கு இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது, அஜித்திற்கு முதன்முதலாக டப்பிங் கொடுத்த நடிகர் என்றால் அது விக்ரம் தான், அவரது நட்பு அப்போதில் இருந்தே தொடர்ந்து வருகிறது.

இந்த நட்பை வெளிப்படுத்துவதற்காக உல்லாசம் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள், இப்படியிருக்க விக்ரம் திரைப்பயணத்தில் அவரின் வாழ்க்கையை திருப்பி போட்ட திரைப்படங்களில் ஜெமினி திரைப்படம் ஒன்று, இந்த திரைப்படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர் கூட்டத்தை பெற்றார் விக்ரம்.

ஜெமினி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான், அஜித்தை வைத்து தான் இயக்குனர் சரண் இந்த கதையை எழுதினார், ஆனால் இந்த திரைப்படத்தில் அஜீத நடிக்க முடியாமல் போனதால் அதன் பிறகுதான் இந்த வாய்ப்பு விக்ரமிற்கு கிடைத்தது விக்ரம் நடித்து செம ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் மூலம் விக்ரமின் திரைப்பயணமே  திசை மாறியது குறிப்பிடத்தக்கது.