நாக சைதன்யா, வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பட குழு.!

movie-2

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு தற்போது நடிகர் சைதன்யாவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை உருவாக்கி வரும் நிலையில் தற்போது அந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதாவது நடிகர் நாக சைதன்யாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் விக்ரம் பிரபு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சென்னை 28 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் வெங்கட் பிரபு. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றினை வெற்று நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து சரோஜா, மங்காத்தா, கோவா உள்ளிட்ட அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.

இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் கடைசியாக மாநாடு மற்றும் மன்மத லீலை ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதனை அடுத்து தற்பொழுது இவர் நாக சைதன்யாவை வைத்து தெலுங்கு திரைப்படம் ஒன்றை உருவாக்கி வருகிறார். இதன் மூலம் தெலுங்கு திரைவுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார் வெங்கட் பிரபு.

மேலும் இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் இன்று நடிகர் நாக சைதன்யாவின் பிறந்தநாள் என்பதால் வெங்கட் பிரபு இவர்களுடைய கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் இந்த படத்திற்கு கஸ்டடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது மேலும் அந்த போஸ்டரை பார்க்கும்பொழுது  நாக சைதன்யா போலீஸ் கெட்டப்பில் இருக்கிறார் அவரை சுற்றி பல போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்.  மேலும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி செட்டி நடித்து வருகிறார்.

custody
custody

இவர்களைத் தொடர்ந்து பிரேம்ஜி, சம்பத்குமார், சரத்குமார் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா  இசையமைக்கிறார். இவ்வாறு இந்த போஸ்டர் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.