ஆக்சன் ராணியாக நயன்தாரா.. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் சேதுபதி.. மாசாக வெளியான ஜவான் பட புதிய போஸ்டர்

jawan
jawan

Jawan Movie: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவரான அட்லீ தற்பொழுது முதன் முறையாக பாலிவுட்டில் தனது கால் தடத்தை பதித்துள்ளார். அந்த வகையில் பாலிவுட் முன்னணி  நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். ஜவான் படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தில் தீபிகா படுகோன் கேமியோரோலில் நடித்துள்ளார்.

200 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஜவான் பட ப்ரோமோஷன் பணிகள் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து ஜவான் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் போன்றவை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதன் பிறகு போஸ்டர் ஒன்றை படக் குழு வெளியிட்டு இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் மேலும் ஒரு போஸ்டர் வெளியிட சோசியல் மீடியாவில் வைரலாகிய வருகிறது. அதாவது அதில் நயன்தாரா கூலிங் கிளாஸ் கையில் நவீன ரக துப்பாக்கி என ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார். அதேபோல் விஜய் சேதுபதி வெள்ளை தாடியுடன் கூலிங் கிளாஸ் வயதான தோற்றத்தில் மாஸாக உள்ளார்.

இவ்வாறு இவருடைய சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கெத்தாக இருப்பதை பார்த்து இதன் மூலம் வில்லனாக புதிய நடிப்பை பார்க்கலாம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்க்கு என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் எந்த அளவிற்கு ஒர்க்கவுட் ஆகும் என்று தெரியவில்லை.

jawan
jawan

எனவே இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். அப்படி தற்பொழுது இவர்கள் வெளியிட்டிருக்கும் புதிய போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் விரைவில் ஜவான் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக் குழு ஈடுபட இருக்கிறது.