வாரிசு படத்தின் சென்சார் மற்றும் டிரைலர் ரிலீஸ் தகவலை வெளியிட்ட படக்குழு.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

vijay
vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிந்துள்ளது எனவே இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீசாக இருக்கிறது இந்த படம் நேற்று சென்சார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூ சான்றிதழ் கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் நாளை 5 மணி அளவில் சன் டிவியின் மூலம் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியன்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எனவே வாரிசு திரைப்படத்தின் டிரைலர் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள். இதனை அடுத்து வாரிசு திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு வாரம் இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்.

மேலும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களை உற்சாகப்படுத்தி எதிர்பார்ப்பை எதிர வைக்க இருக்கிறது இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, ஸ் ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இதனை அடுத்து இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய பிரவின் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி இருக்கிறது. மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு இந்த பொங்கலை நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜித், விஜய் இருவரின் திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்.