பல முன்னணி பிரபலங்களின் கூட்டணியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார் மேலும் இந்த படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இரண்டாவது பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்த நிலையில் தற்பொழுது பல வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க வாசு முடிவெடுத்துள்ளார்.
அந்த வகையில் சந்திரமுகி 2 என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. மேலும் ரஜினிகாந்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார் இவரை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க எம்.எம் கீரவாணி இசை அமைக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் நடிகை ஜோதிகா நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. எனவே சந்திரமுகி 2வில் ஜோதிகா நடித்திருந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் முன்னணி நடிகை கங்கா ரனாவத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு சந்திரமுகி திரைப்படத்தின் முதல் பகுதியில் நயன்தாரா, பிரபு, வினித், நாசர், மாளவிகா மற்றும் பழம்பெரும் நடிகை கே.ஆர் விஜயா, வினயா பிரசாத் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் நடித்திருக்கும் கதாபாத்திரங்களில் எந்தெந்த பிரபலங்கள் நடிப்பார்கள் என்று தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் சந்திரமுகி பகுதி ஒன்றளவிற்கு இரண்டாவது பகுதி இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.