தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல திரைப்படங்களின் நடித்து தற்பொழுது மூத்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கமலஹாசன் அவர்கள் சமீப காலங்களாக படங்கள் தயாரிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது இவருடைய தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் நிலையில் அது குறித்து முக்கியமான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
அதாவது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்பொழுது ஆரம்பிக்க தொடங்கியுள்ள நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
மேலும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸ் இருக்கு தயாராக உள்ளது.
இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் படத்தின் கிட்ராபிக் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வாறு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த அடுத்த திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.
அதேபோல் கமலஹாசன் அவர்களின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் முதன்முறையாக உருவாக இருக்கும் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக அமையும் எனவும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.