இயக்குனர் முத்தையா மற்றும் கார்த்தி கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வெளிவந்த திரைப்படம் விருமன். இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த கொம்பன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. அந்தப் படத்தை விட பல மடங்கு விருமன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்துள்ளன.
ஏனென்றால் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் முன்கூட்டியே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று வெளியான விருமன் திரைப்படமும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை அனைவரும் கண்டு களித்து வருகின்றனர்.
இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து முதல் முறையாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். அவர்களுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சூரி, வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன் போன்ற பல முக்கிய நடிகர் நடிகைகளும் நடித்துள்ளனர். இந்த படத்தை சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
விருமன் படம் வெளியாகி நல்ல விமர்சனம் மற்றும் வசூலை அள்ளி வருகின்ற நிலையில் சமீபத்தில் வெளியான அண்ணாச்சியின் தி லெஜன்ட் படத்துடன் விருமன் படம் தோற்றுப் போய் உள்ளது. ஏனென்றால் பெரிய நடிகர்களின் படங்கள் வெளி வருகிறது என்றால் காலை நான்கு மணி காட்சிகள் ஒளிபரப்பாகும். ஆனால் விருமன் படத்திற்கு காலை நான்கு மணி காட்சி இல்லை.
இதற்காக அரசாங்கத்திடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் அவர்கள் அனுமதி தரவில்லை. ஆனால் அண்ணாச்சியின் தி லெஜன்ட் படத்திற்கு நான்கு மணி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடிகர் உதயநிதி தான் அண்ணாச்சி படத்திற்கு நான்கு மணி காட்சிக்கு அனுமதி வாங்கி கொடுத்தாராம். இதனால் தற்போது கார்த்தியின் விருமன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றன.