Leo : தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக படம் ரிலீஸ் ஆனது. விஜய் உடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன்..
ப்ரியா ஆனந்த், த்ரிஷா, பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துயுள்ளனர். லியோ படம் முழுக்க முழுக்க அதிக ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டிக்கு போட்டு கொண்டு படத்தை பார்த்தனர்.
ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும் குடும்ப அடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இப்படி இருந்தாலும் லியோ திரைப்படம் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை.. இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.
வருகின்ற நாட்களில் வசூல் அதிகரிக்குமா.? குறையுமா.? என்பது பொறுத்து இருந்து பார்போம்.. இந்த நிலையில் லியோ திரைப்படம் ஒரு சில இடங்களில் நஷ்டத்தில் இருந்து தப்பித்துள்ளது லாபத்தை பார்க்கயுள்ளது. எந்தெந்த இடங்கள் என்பது பற்றி விலாவாரியாக பார்ப்போம்..
அரபு நாடுகள், கர்நாடகா, கேரளா, ஹிந்தி, சிங்கப்பூர், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எதிர்பார்த்த வசூல் வந்துவிட்டதால் நஷ்டத்தில் இருந்து தப்பித்துள்ளதாக கூறப்படுகிறது இனி வரும் நாட்களில் அங்கு வசூல் செய்தால் அது லாபத்தில் வரும் என திரை வட்டாரங்கள் மத்தியில் ஒரு பேச்சி எழுந்துள்ளது. இதனால் லியோ டீம் மற்றும் தயாரிப்பாளர் செம்ம சந்தோசத்தில் உள்ளனர்.