நடிகர் கார்த்தி கையில் தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்கள் இருக்கின்றன. இதில் முதலாவதாக விருமன் படம் வருகின்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. அதற்கான ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் உள்ள ராஜா முத்தையா அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு விருமன் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, இயக்குனர் முத்தையா மற்றும் கார்த்திக், அதிதி சங்கர், சூரி, கருணாஸ், ரோபோ சங்கர், ஆர்கே சுரேஷ், இயக்குனர் ஷங்கர் போன்ற பலரும் கலந்து கொண்டு நடிகர் நடிகைகள் குறித்தும் படம் குறித்தும் பேசியுள்ளனர். இந்த படத்தில் முதல் முறையாக கார்த்தியுடன் இணைந்து பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவை தொடர்ந்து விருமன் பட குழு படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் விருமன் பட ஹீரோ ஹீரோயினான கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் கலந்து கொண்டனர்.
அப்போது படம் குறித்து பல கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் உங்கள் அண்ணன் சூர்யாவிற்கு விருது கிடைத்துள்ளது. அப்போது அவர் அமெரிக்காவில் இருந்தார் இந்த செய்தியை நீங்கள் அவரிடம் கூறும் போது எப்படி பீல் பண்ணீங்க என கார்த்தி இடம் அந்த பேட்டியாளர் கேட்டுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த கார்த்திக் அந்த செய்தியை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன், சூரரைப் போற்று படத்தை பார்த்தபோது இந்த படத்திற்கு விருது கிடைக்கவில்லை என்றால் போராட்டம் பண்ணுவேன் என்ற அளவிற்கு தோன்றியது, அந்த மாதிரியான படம் அது நான் படத்தை பார்த்தபோது அழுதேன் எனக் கூறினார் கார்த்தி.