சினிமாவுலகில் ஆக்ஷன், சென்டிமென்ட், ரொமான்ஸ் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி அசத்தி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு விருந்து படைப்பவர் நடிகர் சூர்யா. அதன் காரணமாக இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடிக்கின்றன அண்மைகாலமாக சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து அசத்தி வருகிறார்.
அந்த வகையில் ஜெய்பீம், சூரரைப்போற்று ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சூர்யா பாண்டிராஜ் உடன் கைகோர்த்து இந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன் இந்த திரைப்படமும் சமூக அக்கறைகளை எடுத்துரைக்கும் திரைப்படமாக இருந்தது இந்த திரைப்படம் ஒரு வழியாக மார்ச் 10ஆம் தேதி வெளியாகியது.
வெளிவந்த நாளிலிருந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்குவந்தாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் அதே சமயம் சூர்யா லெவலுக்கு இந்த படம் வசூலை பெறவில்லை மக்கள் கூட்டமும் திரையரங்கை நாடவில்லை என்ற செய்தியும் மறுபக்கம் எழுந்து கொண்டுதான் இருக்கிறது இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் எதற்கும் துணிந்தவன் படம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் சொன்னது : அண்மையில் வெளிவந்த டாக்டர், மாநாடு போன்ற திரைப்படங்கள் ஒரு பரபரப்பு படங்கள் ஆனால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு இல்லை என்று தான் சொல்லவேண்டும் சிம்புவின் மாநாடு சிவகார்திகேயனின் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் ஒரு வாரத்திலேயே லாபகரமான வசூலை ஈட்டியது ஆனால் எதற்கும் துணிந்தவன் முதல் நாள் வசூலில் திணறியது இதற்கான காரணம் நான் கருதுவது படத்தின் கதை களமாக இருக்கலாம் என அதிரடியாக சொன்னார்.
கே ராஜன் மேலும் பேசிய அவர் இந்த படத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளை எடுத்துச் சொல்லி இருக்கின்றார் பாண்டியராஜன் அது நல்ல விஷயமாக இருந்தாலும் ரசிகர்கள் அதே கதை களத்தில் பல படங்களை பார்த்து விட்டனர் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து பல படங்கள் வந்துவிட்டன ஒருவேளை அதன் காரணமாக இந்த படத்திற்கு மக்கள் கூட்டம் வராமல் போயிருக்கலாம் என கூறினார்.
நடிகர் சூர்யா மிகப்பெரிய நடிகர் அதிலிருந்த கருத்தும் இல்லை ஆனால் வித்தியாசமான கதைகளையே மக்கள் விரும்புகின்றனர் ஆனால் எதற்கும் துணிந்தவன் படம் அப்படி அமையவில்லை. அந்த கதைகள் வைத்து பல படங்கள் வெளிவந்துவிட்டன அதே சாயலில் இருப்பதால் தான் இந்த படங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இல்லை மற்றும் வசூல் பெறாமல் இருப்பதாக அவர் கூறினார்.