விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியல் டிஆர்பி யில் டாப் லிஸ்டில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மீனாவின் அப்பாவாக ஜனார்தன் கதாபாத்திரத்தில் ரவிச்சந்திரன் என்பவர் நடித்து வருகிறார் இவர் சினிமாவில் ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் தற்போது பல சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில் தளபதி விஜயின் வாரிசு பட செட்டில் தனக்கு நடந்த ஒரு சோகமான விஷயத்தை பேசி உள்ளார். அவர் கூறியது வாரிசு பட சூட்டிங் இருக்கு வர சொல்லி எனக்கு போன் வந்தது நானும் ஆர்வமாக அங்கு சென்று நின்றேன் அப்போது இயக்குனர் என்னை சில நிமிடம் மேலும் கீழும் பார்த்துவிட்டு உதவி இயக்குனரிடம் ஏதோ காதில் சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார். அந்த உதவி இயக்குனர் என்னிடம் வந்து கேரவனில் போய் உட்காருங்கள் சார் என சொன்னார்.
நானும் கொஞ்ச நேரம் கேரவனில் உட்கார்ந்து இருந்தேன் பிறகு வந்த உதவி இயக்குனர் சார் உங்களை கிளம்ப சொல்லிவிட்டார் உங்கள் லுக் ரொம்ப ரிச் ஆக இருக்கு என கூறினார். அதற்கு ரவிச்சந்திரன் மேக்கப்பில் சரி செய்து கொள்ளலாமே என்று சொன்னார் ஆனால் அதை அந்த உதவி இயக்குனர் காதிலே வாங்கவில்லை.
இப்படி கூப்பிட்டு அசிங்கப்படுத்தியது எனக்கு பெரிய மனவேதனையை உண்டாக்கியது என்னை நடிக்க வைத்து உங்களுக்கு நடிப்பு வரவில்லை என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் அவர் என்னை மேலையும் கீழையும் பார்த்துவிட்டு போ என்று சொன்னது எனக்கு மிகவும் கஷ்டத்தை கொடுத்துள்ளது பின்பு என்னை அழைத்த மேனேஜரிடம் கேட்டேன் அவர் விஜய் சாரிடம் போய் இப்படி நடந்து உள்ளது எனக் கூறுங்கள் என்று சொன்னதும் நான் விஜய் சாரை பார்க்க போனேன்,
அப்பொழுது உடனே அவர்கள் என்னை கையெடுத்து கும்பிட்டு உங்களுக்கு பேசியபடி ஒருநாள் சம்பளம் கொடுத்து விடுகிறோம் விஜய் சாரை எல்லாம் பார்க்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர். பின்பு மிக மன வேதனையுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டேன் எனக்கு ஒரு நாள் சம்பளமும் வந்தது என மிக வருத்தத்துடன் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.