வேதாளம் முருங்க மரத்தில் ஏறியது போல் மீண்டும் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு மாறிய ராஜ்கமல்.!

rajkamal
rajkamal

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல பிரபலங்கள் மாறிவருகிறார்கள் ஆனால் அவர்கள் முழு திறமைகள் இருந்தால் தான் வெள்ளித்திரையில் நீடிக்கலாம் என்பது பலருக்கும் தெரியும்.

அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறிய நடிகர் தான் ராஜ்கமல் சின்னத்திரையில் தான் இவர் முதலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிட தக்கது  2006 ஆம் ஆண்டு பச்சை குதிரை என்ற திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ராஜ்கமல் அதனைத் தொடர்ந்து சரோஜா திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

மேலும் நவீன சரஸ்வதி சபதம், லிங்கா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் இவ்வாறு இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக ஹீரோவாக இவர் அறிமுகமான திரைப்படம் தான் மேல்நாட்டு மருமகள் இந்த திரைப்படம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியானது ஆனால் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இந்நிலையில் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார் இவர் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபி நானும் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த தகவல் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

rajkamal
rajkamal