நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக ஓடிக்கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன இருப்பினும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாறன் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை..
இருப்பினும் அதை ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார் தனுஷ் கையில் தற்பொழுது வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஹாலிவுட் திரைப்படமான க்ரே மேன் என்ற திரைப்படத்திலும் நடித்து உள்ளார் இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் விட்ட இடத்தை நடிகர் தனுஷ் பிடிப்பார் என சொல்லப்படுகிறது.
இதில் ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கி இருக்கும் திரைப்படம் நானே வருவேன். காரணம் தனுஷும் செல்வராகவனும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது தான் ஸ்பெஷல் இவர்கள் இருவரும் இதுவரை இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் அந்த வகையில் நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது.
இந்த படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது செல்வராகவன் இந்த படத்தை இயக்கி நடித்தும் வருகிறார். இந்த படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நானே வருவேன் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படம் எடிட்டிங் வரை சண்டை நடத்துவது எல்லாம் படத்தின் கதை தனுஷ் உடையது செல்வராகவன் இயக்கம் மட்டும்தான் செய்து உள்ளார் என கூறப்படுகிறது.
தற்பொழுது படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம் தனுஷ் நானே வருவேன் படம் நினைத்த மாதிரி வரவில்லை என சொல்லப்படுகிறது அனைத்தும் முடிவடைந்த பிறகுதான் படத்தை பார்த்தால் தான் திருப்தியாக இருக்கும் என செல்வராகவன் கூறியிருக்கிறார்.