திடீரென வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்ட படக்குழுவினர்கள்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

varisu
varisu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் துணிவு, வாரிசு திரைப்படத்தினை பற்றி தான் பேசப்பட்டு வருகிறது எந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் நாள்தோறும் தொடர்ந்த திரைப்படங்களைப் பற்றி அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.

மேலும் வாரிசு, துணிவு இருதரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு வரும் நிலையில் தற்போது வாரிசு திரைப்படம் ரிலீசாகும் தேதி தள்ளிப் போவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் பெரிதும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். தெலுங்கு முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மேலும் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் வைத்து உருவாகியுள்ள நிலையில் பலரும் வாரிசு திரைப்படம் சீரியல் போல் இருக்கும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒளிபரப்பாக இருக்கிறது விஜய் தெலுங்கிலும் தன்னுடைய மார்க்கெட் உயர வேண்டும் என்பதற்காக இவ்வாறு தெலுங்கு முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் திரைப்படத்தின் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தமிழில் வாரிசு திரைப்படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி அன்று ரிலீஸ்சாக இருக்கிறது.

ஆனால் தெலுங்கில் தற்பொழுது ரிலீஸ் ஆகவில்லையாம் தமிழில் மட்டும் தான் ஜனவரி 11ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது தெலுங்கில் சில நாட்கள் கழித்துதான் ரிலீஸ் செய்ய பட குழுவினர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது எனவே இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.