தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ் பிரபலமான நமது நடிகர் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி பாடல் பாடுவது திரைப்படங்கள் தயாரிப்பது என பன்முக திறன் கொண்டவர் அந்த வகையில் இவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே வெற்றியில் தான் முடிந்து வருகிறது.
பொதுவாக தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் வேறு எந்த மொழிகளிலும் திரைப்படங்களில் நடிப்பது கிடையாது ஆனால் தனுஷ் தற்போது பாலிவுட் கோலிவுட் என வெற்றிகண்டது மட்டுமில்லாமல் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான தி கிரேமேன் என்ற திரைப்படமானது அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் வெளியானது மட்டுமில்லாமல் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வருகின்ற 22 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது மட்டுமில்லாமல் மித்ரன் ஜவஹர் என்ற இயக்குனர் தான் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது post-production வோர்க் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்தினை தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது மட்டுமில்லாமல் அதில் பல்வேறு முன்னணி நடிகைகள் நடிப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திரைப்படம் விடுமுறை தினத்தை முன்னிட்டு வெளிவந்த அதன் காரணமாக இந்த திரைப்படத்தின் வசூல் மிக பிரமாண்டமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.