தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவருக்கென தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் இவருக்கென ரசிகர் மன்றம் கூட இருக்கிறது
இவ்வாறு மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிப்பது மட்டுமில்லாமல் கதாநாயகியாக பூஜா ஹெக்டே செல்வராகவன் யோகிபாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இவ்வாறு உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதாக கூறினார்கள் தெரிவித்துள்ளது மட்டுமில்லாமல் வருகின்ற பொங்கலுக்கு திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் தளபதி விஜயின் 60 வது திரைப்பட அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படிபள்ளி என்பவர்தான் இயக்க உள்ளாராம்.
இந்த இயக்குனர் ஏற்கெனவே கார்த்திகை வைத்து தோழா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுபகல் தயாரிக்க உள்ளதாகவும் இப்படத்தில் பூஜை கூட ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்த போவதாக திட்டமிட்டுள்ளார்கள்.
இதுவரை தமிழ் மொழியில் மட்டும் திரைப்படம் நடித்து வந்த தளபதி விஜய் தற்போது வேற்று மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்தவகையில் இத்திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மொழி பெயர்க்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போகிற போக்கை பார்த்தால் ஹிந்தி ஹாலிவுட் கோலிவுட் பாலிவுட் என தளபதி விஜய் ஒரு ரவுண்ட் வந்துவிடுவார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.