சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள “அரண்மனை 3” படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு.? பிரபல நடிகர் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

aranmanai-3
aranmanai-3

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் ஹீரோவாகவும் வெற்றி கண்டு வருபவர் சுந்தர் சி. ரஜினி, அஜீத் போன்ற சிறப்பான நடிகர்களை வைத்து சூப்பர் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அதை தொடர்ந்து படிப்படியாக முன்னேறி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் சினிமாவில் ஹீரோவாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் அதிலும் வெற்றி கண்டார்.

சமீபகாலமாக பேய்ப் படங்களை எடுத்து வருகிறார் அந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் அரண்மனை 2 பாகங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் எடுத்ததை தொடர்ந்து மூன்றாம் பாகத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படம் வெகு விரைவிலேயே திரைக்கு வர இருக்கிறது.

மூன்றாம் பாகத்தில் ஹீரோவா ஆர்யா மற்றும் நடிகை ராசி கண்ணா, ஆண்ட்ரியா மற்றும் பிக் பாஸ் சக்க்ஷி அகர்வால், போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகி பாபு போன்ற பிரபலங்களும் காமெடியில்  அசதியுள்ளனர். இதனால் மக்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

ஐ படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது இந்த திரைப்படம் எப்பொழுது தான் வெளிவரும் என்பதுதான் மிகப் பெரிய கேள்வி குறியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோவான ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். இப்படம் வருகின்ற அக்டோபர் 14ம் தேதி ஆயுதபூஜை பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக கூறினார்.