பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதியை “லாக்” செய்த படக்குழு.! எப்போ ரிலீஸ் தெரியுமா.?

ponniyin-selvan
ponniyin-selvan

சினிமா உலகில் அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் பலரும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் 90 காலகட்டங்களில் இருந்து இப்போது வரையிலும் பல்வேறு விதமான நாவல் பற்றிய படங்கள் மற்றும் காதல், ரொமான்ஸ் என பல்வேறு படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்து வந்ததால் தான் இன்று வரையிலும் இவரது பெயர் தமிழ் சினிமாவில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மேலும் இவரது படத்திற்காக மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றன இப்போது கூட இவரது இயக்கத்தில் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க இயக்குனர் மணிரத்தினம் முடிவு செய்துள்ளார் முதல் பாகத்தில் விக்ரம், அமிதாப்பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் என மிகப்பெரிய ஒரே நட்சத்திர பட்டாளம் இதில் நடிக்கிறது.

முதல் பாகத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின பொன்னியின் செல்வன் படம் நமக்கு தெரிந்தவரை அடுத்த வருடம் தான் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் இதுவரை தேதியை குறிப்பிடாமல் இருந்தது.

பொன்னியின் செல்வன் பட குழு.தற்போது அதற்கும் குறி வைத்து விட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் அடுத்த வருடம் சம்மர் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. இந்த படத்துடனும் பல்வேறு திரைப்படங்கள் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

ஏற்கனவே பீஸ்ட் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது சம்மரில் தான் இந்த படம் வெளியாகும் என கணிக்கப்பட்டது அந்த வகையில் சம்மரில் கேஜிஎஃப் பீஸ்ட் ஆகிய படங்களுடன் பொன்னின் செல்வன் ரிலீஸ் ஆக போகிறது.