தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் 66.
இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, சங்கீதா உள்ளிட்ட இன்னும் பலரும் இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. மேலும் அடுத்தடுத்து நடப்பதற்காக செட்கள் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இத் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. மேலும் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதற்காக சமீப காலங்களாக வெளியாகும் பான் இந்திய மொழித் திரைப்படங்களில் அனைத்து மொழிகளிலும் நடிக்க பிரபலமான நடிகர்களை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் பெரும்பாலும் சத்யராஜ் மற்றும் நாசர் இருவரும் தான் பான் இந்திய மொழி படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தளபதி 62 திரைப்படத்தில தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது தெலுங்கில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் மகேஷ்பாபு தளபதி 66 திரைப் படத்தில் இணைந்துள்ளார். மேலும் தளபதி விஜய் மற்றும் மகேஷ்பாபு இருவரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மகேஷ்பாபு சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் திரைப்படத்தில் தமிழ் வசனங்களை பேசி இருந்தார் அந்த வகையில் மகேஷ் பாபுக்கு தமிழ் சரளமாக வரும் இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இவர் பிரபலமடைந்துள்ளார்.
இவ்வாறு ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கவரவேண்டும் என்ற ஒரு கட்டாயத்தால் மகேஷ்பாபுவை இணைத்துள்ளார்கள். மகேஷ்பாபு கௌரவ தோற்றத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தளபதி67 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.