தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால் இவர் ஆரம்பத்தில் அதிக வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் அண்மை காலமாக இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆக்சன் திரைப்படங்கள் பெரிய அளவு வெற்றியை ருசிக்காமல் இருப்பதால் நாளுக்கு நாள் விஷாலின் சினிமா பயணம் சரிவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது
இதிலிருந்து மீள நடிகர் விஷால் தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் லத்தி மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருக்கிறது
இதில் முதலாவதாக லத்தி திரைப்படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து வருகிறார் இந்த படத்தில் அவர் போலீசாக நடிப்பதாக தெரிய வருகிறது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தை வினோத் குமார் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்தடுத்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. லத்தி படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடிகர் விஷால் அதிரடியாக தனது உடம்பை முறுக்கேற்றி வருகிறார்.
படமும் வேற லெவலில் உருவாகி வருகிறதாம் நிச்சயம் இந்த திரைப்படம் விஷாலுக்கு மிகப்பெரிய ஒரு கம் பேக் திரைப்படமாக இருக்குமென கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்காக விஷால் ஒர்க்கவுட் செய்த புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.