நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன இதனால் விட்ட இடத்தை நடிகர் சிம்பு இன்னும் இரண்டு மூன்று திரைப்படங்களியே பிடித்து விடுவார் என்பதே அவரது ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
மாநாடு திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது சம்பளத்தை சற்று அதிகரித்து உள்ளார் என்ற தகவலும் வெளிவருகின்றன சிம்பு கையில் இப்போது கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்கள் போய்க்கொண்டிருக்கின்றன வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் முடிய இன்னும் சில நாட்களே இருப்பதாக தகவல்கள் வெளியாகின இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பணியை செய்ய..
அழைத்து வந்ததை அடுத்து அங்கு சென்று தனது வேலையை கச்சிதமாக செய்து வருகிறார் இவரை நம்பி எடுத்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தற்போது புலம்பி கிடக்கின்றனர் ஏனென்றால் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்கும் முடியவில்லை அதே சமயம் பத்து தல படத்தின் ஷூட்டிங்கும் பாதிலே கிடைக்கிறது.
சிம்புவை எப்படியாவது தொடர்பு கொண்டு அவரை படத்தில் நடிக்க வைக்க முனைப்பு காட்டி வருகின்றனர் படக்குழு. ஆனால் அவர் இப்பொழுது எங்கு இருக்கிறார் என்ன பண்ணுகிறார் என்பதே தெரியாமல் இருக்கிறதாம் அவருடன் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் சிலரை கேட்கும்போதும் நான் அவருடன் தொடர்பில் இல்லை அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என கை காட்டி விடுகிறார்கள்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறது படக்குழு. நடிகர் சிம்பு தொடர்ந்து பிக்பாஸில் தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார் இதற்கிடையில் அவர் கல்யாணம் செய்யப் போகிறார் என்ற தகவல் உலா வருகிறது. இந்த பிரச்சனை முடிய நடிகர் சிம்பு வாய் திறந்தால் மட்டுமே தீர்வாகும்.