ஜப்பானுக்கு பூஜைய போட்டு படப்பிடிப்பை ஆரம்பித்த படக்குழு.! எல்லாம் சர்தார் வெற்றிமாயம் தான் போல

karthi
karthi

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஜி முருகன் இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் திரைப்படம் ஜப்பான் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி அவர்கள் நடிக்க உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அணு இமானுவேல் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் கார்த்தி அவர்கள் நடிப்பில் உருவாகி உள்ள விரும்பும் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

சர்தார் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி அவர்கள் கைதி 2 திரைப்படத்தின் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஜப்பான் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக பட குழு அறிவித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜப்பான் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் கார்த்தி.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து விரைவில் கைதி 2 தொடங்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் சுனில் அவர்கள் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தின் படபிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜப்பான் திரைப்படம் முடிந்தவுடன் அடுத்ததாக கார்த்தி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2 திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.