புதிய போஸ்டரை வெளியிட்ட “விக்ரம்” படக்குழு.? மிரட்டுறது ஹீரோ இல்ல.. வில்லன்.! தீயாய் பரவும் செய்தி.

vikram-movie
vikram-movie

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் விளைவாகவே டாப் நடிகர்களின் படங்களும் இவருக்கு ஈசியாக கிடைக்கின்றன

அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தில் வில்லனாக பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி போன்ற ஜாம்பவான்கள் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டி உள்ளது.

சமீபத்தில் கூட இவர்கள் மூவரும் இருக்கும் ப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது மேலும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் அவ்வ போது வெளியாகின இப்படி விக்ரம் படத்தின் செய்திகள் உலா வர தொடங்கி உள்ளன.

கமலுடன் இணைந்து பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி மோதும் காட்சிகளில் எடுக்க படக்குழு ரெடியாக இருக்கிறது இவர்கள் மோதும் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என கூறப்படுகிறது

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பகத் பாசிலின் புகைப்படத்தை மட்டும் தனியாக வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து உள்ளது படக்குழு இவ்வாறு செய்ய காரணம் இன்று அவரது பிறந்த நாள் என்பதால் அவருக்காக ஸ்பெஷலாக இந்த பகத் பாசிளின் புதிய லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இதோ மிரட்டும் பகத் பாசிலின் நியூ லுக் :

vikram-movie
vikram-movie